ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:54 IST)

"தங்கலான்"படத்திற்கு "மாளவிகா மோகனன்" சிகப்பு உடையில் ப்ரோமோஷனல்!

ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15  சுதந்திர தினத்தன்று திரையரங்கிற்கு வரவிருக்கும் திரைப்படம்
"தங்கலான்" 
 
மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ"என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்
மாளவிகா மோகனன்.
 
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் "தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற 
முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இப் படத்தில் மாளவிகா மோகனன் ஒரு சவாலான கதாபாத்திரத்திற்கு மிகவும் மெனக்கட்டுள்ளார்.
 
அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள்  மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்றுள்ளதாம்
 
அவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு அந்த மேக்கப்புடன் நடிப்பது என்பது மிகவும்  சிரமம் அதையும் பொருட்படுத்தாமல்  நடித்துள்ளார்.
 
படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு  சிலம்பம் சுத்தும் காட்சிகள் அதிக ரீ டேக் போன காரணத்தினால்  அவருடைய கை மிகவும் பெரிதாக வீங்கி விட்டது. 
 
அதையும் பொருட்படுத்தாமல் தனது காட்சியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக நடித்து கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.
 
பாலிவுட்டில் வெளியாகும் திரைப்பட ப்ரோமோஷனல்  நிகழ்வுகளுக்கு அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் 
தான் நடித்த கதாபாத்திர கெட்டபில் வருவது வழக்கம்.
 
அது போன்று தங்கலான் திரைப்படத்தில்
மாளவிகா மோகனன்
வரும் காட்சிகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
 
அதே சிவப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் தங்கலான் படம் அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் பார்க்கலாம்.