புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (08:13 IST)

“சின்ன வயசுல ஒரு முட்டாள்தனமான எண்ணம் இருந்தது”… மாளவிகா மோகனன் பகிர்ந்த தகவல்!

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனாலும் அவரை மிகவும் கவனிக்க வைப்பது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கமே. அதில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவரிசையில் இப்போது அவர் ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் ஒரு ரசிகர் “உங்களுக்கு சின்ன வயதில் உங்களுக்கு ஏதாவது முட்டாளதனமான எண்ணம் இருந்ததா?” என்று கேட்டிருந்தார். அவருக்கு “நான் சிறுவயதில் பெரியவர்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் குழந்தைப் பருவ காலத்தை மிஸ் செய்கிறேன். திரும்பவும் என் சிறுவயது காலத்துக்கே செல்ல விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.