வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:47 IST)

மஹா பட ரிலீஸுக்கு தடையில்லை… நீதிமன்றம் அறிவிப்பு!

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ள மஹா திரைப்படத்துக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் அளித்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வங்தார். 'மகா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் நின்றது.

அதையடுத்து இப்போது முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ரிலிஸுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா இரண்டாம் அலைக் காரணமாக மீண்டும் திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் படக்குழு. அதற்காக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஆனால் அதைப் படத்தின் இயக்குனர் ஜமீல் எதிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்து படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ‘படத்தில் என் தலையீடு இல்லாமல் சில காட்சிகளை எடுத்து ஏனோதானாவொன்று கதையை முடித்துள்ளனர். மேலும் எனக்கு சம்பள பாக்கி உள்ளது.’எனப் பல புகார்களை சொல்லியுள்ளாராம். அதே போல தயாரிப்பாளரும் இயக்குனர் மேல் பல புகார்களை வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் மஹா ரிலீஸுக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.