வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (07:36 IST)

மாபியா படத்தில் இருந்த அந்த புகைப்படங்கள் கிளப்பிய சர்ச்சை – அமேசான் ப்ரைம் அதிரடி நடவடிக்கை !

மாபியா படத்தில் உண்மையாகவே கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப் பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான மாபியா திரைப்படம் ஆரம்பம் முதலே நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதற்குக் காரணமாக சொல்லப்படுவது குறும்படம் எடுக்க வேண்டிய அளவுக்குக் கதையை கார்த்திக் நரேன் படமாக எடுத்து அதை மறைக்க தேவையில்லாமல் ஸ்லோ மோஷன் ஷாட்டுகளைப் போட்டு ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதே என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் இப்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள நிலையில் புது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு இடத்தில் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் என்ற இடத்தில் சில புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருக்கும். உண்மையில் இது கனடாவில் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்ற கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களே. இது சம்மந்தமாக அந்த கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இதுபற்றி தங்களது அதிருப்தியை தெளிவுப்படுத்த அமேசான் ப்ரைம் இது தொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு பிரச்சனைகள் முடிந்த பின்னர் அந்த புகைப்படங்கள் ப்ளர் செய்யப்படும் என அறிவித்துள்ளது.