காதல், சாக்லேட் பாய் இமேஜ் வேண்டாம்: மாதவன்!!
மாதவன் தமிழ் சினிமாவில் தனது இரண்டாம் இன்னிங்சை இறுதி சுற்று படத்திற்கு பின்னர் வெற்றிகரமான பயணமாக மாற்றியுள்ளார்.
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் வசூல் சாதனையையும் படைத்து வருகிறது.
தற்போது, மாதவன் அடுத்து இயக்குனர் விஜய் சற்குணம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதோடு சேர்த்து மாதவன் ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளாராம்.
ஆதாவது, இனி காதல் படங்களில் நடிப்பது இல்லை, இதற்கு மேலும் சாக்லேட் பாய் இமேஜ் தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், தனது வயதுக்கு ஏற்க நல்ல கதையுள்ள படத்தில் மட்டும் நடிப்பதாக முடிவெடுத்துள்ளார்.