நெஞ்சுக்கு நீதி படத்தைப் பார்த்த முதல்வர் முக ஸ்டாலின்… வைரலாகும் புகைப்படம்!
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் சென்சார் செய்யப்பட்டு UA சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்து படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக படக்குழுவிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.