செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (17:49 IST)

தாறுமாறாக எகிறும் 2.O படத்தின் பட்ஜெட்: தலையில் துண்டு போட்ட லைக்கா??

ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் 2.O படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.


 
 
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.O திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. 75 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை அறிவித்துள்ளது.
 
ரூ.250 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட 2.O தற்போது 400 கோடி ரூபாயை ஏட்டியுள்ளதாம். இன்னும் 35 நாட்கள் படத்தின் ஸூட்டிங் பாக்கியுள்ளதாம். 
 
இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதால் லைட் செட் அமைக்க அதிக செலவானதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
இதுவே 400 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளுக்கு தனியாக செலவாகும் என்று தெரிகிறது.