சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (10:51 IST)

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உருவாகும் ‘சங்கமித்ரா’: லைகா தயாரிக்கின்றதா?

Sangamithra
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா
 
இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படம் கால தாமதமாகி வருவதை அடுத்து அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்
 
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகியாக திஷா பதானி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva