2k கிட்ஸ்களை வெகுவாகக் கவர்ந்த லவ் டுடே திரைப்படம்!
இன்று வெளியாகியுள்ள திரைப்படங்களில் லவ் டுடே திரைப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் 5 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதில் இளைஞர்களை கவர்ந்துள்ளது லவ் டுடே திரைப்படம்தான். படம் பார்த்த இளைஞர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிடும் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது புலப்படுகிறது. ஆனால் விமர்சகர்கள் மத்தியில் கிரிஞ்ச் படமாக உள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.