1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (22:07 IST)

லவ் த மாஸ்டர்...விஜய் பட நடிகரின் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கிற்கு புத்துயிரூட்டியது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.#Thalapathy

இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. உலகளவில் ரூ.200 கோடி வசூல் வாரிக்குவித்துள்ளது.

இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த கைதி மற்றும் ப பாண்டி படத்தில் நடித்துப் புகழ்பெற்றிருந்த தீனா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டிருந்தார்.

இதை,லவ் த மாஸ்டர் , தளபதி  என்று கேப்சனுடன் விஜய்யுன் தானிருக்கும் இப்புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், இப்படத்தில் தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by dheena (@dheena_offl)