புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:27 IST)

கவினுடன் பிரேக் அப் ஆகிவிட்டது உண்மைதான்: மனம் திறந்த லாஸ்லியா!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் நிகழ்ச்சியின் போது ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்தனர் 
 
இந்த நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, கவினை நான் காதலித்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கவினுக்கும் வெளியே வந்த பிறகு உள்ள கவினுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததால் எங்களுக்குள் செட் ஆகவில்லை என்று லாஸ்லியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்