திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (12:30 IST)

மாஸ்டர் படத்தில் சில விஷயங்கள் வொர்க் அவுட் ஆகல… மனம்திறந்த லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் படத்தின் நீளம் மற்றும் தொய்வான இரண்டாம் பாதி ஆகியவைக் குறித்து எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘விஜய்க்காக சில விஷயங்கள் செய்தால் வொர்க் அவுட் ஆகும் என நினைத்தோம். ஆனால்  பல இடங்களில் நான் கோட்டை விட்டுவிட்டேன்’ எனத் தனது குறைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.