செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (15:41 IST)

இன்னும் 5 ஆண்டுகளுக்குக் காதல் படங்கள் எடுக்க வாய்ப்பில்லை… லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்!

மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் இணந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி பரபரப்பான இயக்குனராக இருந்து வரும் லோகேஷின் படங்களில் தொடர்ந்து வன்முறை, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவை உள்ளன. இது குறித்து சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவையில்லாமல் ஒரு அழகான காதல் படம் அவரிடம் எதிர்பார்க்க முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எனக்கே தெரியாமல் இப்படி ஒரு விஷயத்தில் நான் சிக்கிக் கொண்டேன். அடுத்தடுத்து படங்கள் கமிட்மெண்ட் உள்ளதால் இன்னும் 5 வருடங்களுக்கு என்னால் ரொமான்ஸ் படம் எடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.