ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (08:07 IST)

லியோ படத்தில் 20 சதவீதம்தான் விமர்சனத்துக்கு உள்ளானது… லோகேஷ் கனகராஜ் பதில்!

மாஸ்டர் திரைப்படத்துக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் இணைந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க, ஸ்டுடியோ செவன் சார்பாக லலித் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்தன. அதற்குக் காரணம் மிகவும் திராபையாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகம்தான். இந்நிலையில் அதை சமாளிக்க ரிலீஸூக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் சொல்லப்பட்ட பிளாஷ்பேக் பொய்யானது எனக் கூறினார். அது மேலும் விமர்சனங்களுக்கு ஆளானது.

இந்நிலையில் இப்போது லியோ படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் “லியோ படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மைதான்.  ஆனால் ஹீரோ அறிமுகக் காட்சி, இண்டர்வெல் காட்சி மற்றும் க்ளைமேக்ஸில் LCU தொடர்பு ஆகியவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தன.ரசிகர்களுக்கு 20 சதவீதம் படம்தான் பிடிக்கவில்லை. அது வெற்றியை பாதிக்கவில்லை. ஆனால் ரசிகர்களின் கருத்துகளை ஏற்று என்னுடைய அடுத்த படத்தில் அந்த குறைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.