செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (09:46 IST)

தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்தாரா நவரச நாயகன் கார்த்திக்?

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 6 வில்லன்கள் இந்த படத்தில் இருப்பதாகவும், மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்திக்கை அனுகியதாகவும், ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.