ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (16:36 IST)

லோகேஷ் இணை இயக்குனரோடு இணையும் ராஜ்கமல் பிலிம்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம், மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியவர் அந்த படங்களின் இணை இய்ககுனர் விஷ்ணு எடாவன். இந்த படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலீஸான டாடா படத்தில் கூட அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.  

இந்நிலையில் இப்போது லியோ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வரும் அவருக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.