1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (23:32 IST)

அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமாரரின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு –கமல்ஹாசன்

காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். வசந்தகுமார் அவர்களின் மறைவு வருத்தம் அளிப்பதாகவும் வர்த்தகம் மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்கு கவனிக்கத் தக்கது என்று கூறியுள்ளார்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.