புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (22:58 IST)

வாழ்க்கையே ஒரு புட்பால் மாதிரி: விஜய்யின் சுவாரஸ்ய பேச்சு

ஒவ்வொரு திரைப்படத்தின் ஆடியோ விழாவிலும் விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்து வரும் நிலையில் இன்றைய ‘பிகில்’ ஆடியோ விழாவிலும் அவரது பேச்சில் பொறி பறந்தது. 
 
 
வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து விளையாட்டு போன்றது என்றும், அதில் நாம் கோல் போட முயற்சி செய்யும்போது  அதை தடுக்க ஒரு கூட்டம் வரும் என்றும், அதுவாவது பரவாயில்லை, நம்ம கூட இருக்குறவனே சிலசமயம் சேம்சைட் கோல் போடுவான் என்றும் வாழ்க்கையின் எதார்த்தத்தை விஜய் இரண்டே வரிகளில் மிக அழகாக கூறினார்.
 
 
அதேபோல் யாரோட அடையாளத்தையும் ஏற்று கொள்ள வேண்டாம் என்றும் உங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டு வாழுங்கள் என்றும் கூறிய விஜய், ‘வாழ்க்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க, அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா இருங்க’ என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.
 
 
மேலும் அரசியல்ல புகுந்து விளையாடுங்க என்றும், ஆனால் விளையாட்டில் தயவு செய்து அரசியலை கொண்டு வர வேண்டாம் என்றும் அவர் அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.