ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:34 IST)

லியோ அப்டேட் எப்ப வரும்… அனிருத் அளித்த பதில்!

தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் செகண்ட் சிங்கிள்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜவான் படத்தை பார்க்க வந்த அனிருத்திடம் லியோ அப்டேட் எப்போது வரும் எனக் கேட்ட போது “அடுத்த வாரம் லியோ படத்தின் அப்டேட் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.