வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (09:07 IST)

அனிருத் குரலில் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்… லேட்டஸ்ட் அப்டேட்

வாரிசு படத்துக்கு பிறகு நடிகர் விஜய் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. நான் ரெடி வரவா என்ற அந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியிருந்தார். லோகேஷின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்தபடத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகிய இருவரும் பாடியுள்ளதாகவும், விரைவில் இந்த பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.