கமல், ரஜினி பட இயக்குனர் ஐ.வி.சசி காலமானார்
பிரபல மலையாள, தமிழ் இயக்குனர் ஐ.வி.சசி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70
கமல்ஹாசன் நடித்த குரு, ரஜினிகாந்த் நடித்த 'காளி', கமல், ரஜினி இருவரும் இணைந்து நடித்த 'அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்பட பல தமிழ் திரைப்படங்களளயும் ஏராளமான மலையாள படங்களையும் இயக்கியவர்.
இவர் இயக்கிய சுமார் 30 படங்களில் நாயகியாக நடித்த நடிகை சீமாவை திருமணம் செய்து கொண்ட ஐ.வி.சசிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் அனியை ஹீரோவாக வைத்தும் ஒரு படத்தை ஐ.வி.சசி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளி, குரு, அலாவுதீனும் அற்புத விளக்கும், ஒரே வானம் ஒரே பூமி, இல்லம், பகலில் ஓர் இரவு, எல்லாம் உன் கைராசி போன்ற தமிழ் படங்கள் இவர் இயக்கிய பிரபலமான படங்கள் ஆகும்.