அமலாபால் மட்டுமல்ல...இன்னும் பலர் - அதிர்ச்சி கிளப்பும் லீனா மணிமேகலை

Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (15:27 IST)
இயக்குனர் சுசிகணேசனால் பாதிக்கப்பட்டது பல பெண்கள் என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

 
'திருட்டுப்பயலே' இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும் அந்த படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. அவர் மீது ரூ.1 மான நஷ்ட வழக்கையும் சுசிகணேசன் பதிவு செய்துள்ளார்.
 
இந்த நிலையில் 'திருட்டுப்பயலே' படத்தின் நாயகி அமலாபாலும், சுசிகணேசன் மீது மீடூ குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியபோது, ' இயக்குனர் சுசிகணேசனின் இரட்டை அர்த்த தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன்.
 
இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அமலாபாலின் இந்த குற்றச்சாட்டால் சுசிகணேசன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் லீனா மணிமேகலை தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆதரவிற்கு நன்றி. ருட்டுப்பயலே படப்படிப்பில் உங்களுக்கு நடந்ததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். இன்னும் சில பெண்களும் சுசிகணேசன் தங்களிடம் அத்துமீறியதை என்னிடம் தொலைபேசியிலும் இன்பாக்ஸிலும் பகிர்ந்திருக்கிறார்கள். உங்கள் குரல் அவர்களையும் தைரியப்படுத்தட்டும். #metoo” எனக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :