செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:35 IST)

20 நாளுக்கு முன் தடுப்பூசி... விவேக் போன்றே மரணித்த கேவி ஆனந்த்!

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். 
 
கே வி ஆனந்த்திற்கு கொரோனா நெகட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இப்படியான நேரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி இருந்ததால் தானாகவே காரை எடுத்து சென்று மருத்துவனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். 
 
சிகிச்சை எடுத்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடலை பரிசோதித்து பார்க்கையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். விவேக் மரணத்திற்கு பிறகு கேவி ஆனந்த் மரணமும் தடுப்பூசி சர்ச்சையில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்று இருந்ததால் அவரது  உடல் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக மாநகராட்சி மூலம் பெசன்ட் நகர் மயானத்தில்அடக்கம் செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.