ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:39 IST)

மீண்டும் தமிழில் நடிக்கும் முன்னாள் கர்நாடக முதல்வரின் மனைவி – குட்டி ராதிகா ரிஎண்ட்ரி !

தமிழில் இயற்கை படம் மூலம் அறிமுகமாகி பின்னர் காணாமல் போன நடிகை குட்டி ராதிகா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தமிழில் இயற்கைப் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. அந்த படம் வெற்றிபெற்று தேசிய விருது வரை பெற்ற நிலையில் அடுத்து அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகாததால் அவர் திரையுலகில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். அதன் பின்னர் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவர் தமயந்தி என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இறுதிக் கட்ட பணிகளில் இருக்கும் இந்தப் படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.