1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:51 IST)

வெப் சீரிஸ் ஆகும் குற்றப்பரம்பரை! இயக்குவது யார் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தனது கனவு திரைப்படம் என்று ’குற்றப்பரம்பரை’ திரைப்படத்தை கடந்த பல ஆண்டுகளாக தெரிவித்து வந்தார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக அவர் திரைக்கதையை தயார் நிலையில் வைத்திருந்தாலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. வேலராமமூர்த்தி எழுதிய இந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரதிராஜா பூஜையும் போட்டார். ஆனாலும் பூஜையோடு அந்த படத்தின் படப்பிடிப்பில் நின்றது
 
இதே நேரத்தில் இயக்குனர் பாலாவும் ’குற்றப்பரம்பரை’ கதையை திரைப்படமாக இயக்க உள்ளதாக அறிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குற்றப்பரம்பரை கதையை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினர்களிடையே இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதையை இருவருமே இயக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ’குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க இருப்பதாக பாரதிராஜா தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படம் வெப்சீரிஸ்ஸாக உருவாக இருப்பதாகவும் தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இந்த திரைப்படத்தை ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வெப்சீரிஸ்ஸை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த வெப்சீரிஸின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது