செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (16:20 IST)

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய வெப் சீர்ஸ்!

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இந்த கதையை 20 எபிசோட்கள் கொண்ட ஒரு வெப் சீரிஸாக எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த சீரிஸை ஒளிப்பதிவாளரும்  இயக்குனருமான வேல்ராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.