நெஞ்சில் நெருப்பை கொட்டாதீர்கள் …இரண்டாம் குத்து இயக்குநருக்கு கே.எஸ் தங்கசாமி கண்டம் !
தமிழில் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது தானே இயக்கி நடித்துள்ள படம் “இரண்டாம் குத்து”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஆடையின்றி செய்திதாளால் உடலை மூடியிருக்குமாறு வெளியான போஸ்டர் இளைஞர்களிடையே கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், சமூக ஆர்வலர்களால் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் அந்த போஸ்டர் விளம்பரம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா “இரண்டாம் குத்து பட விளம்பரத்தை கண்ணால் பார்க்கவே கூசுகிறது. சினிமா வியாபாரம்தான். ஆனால் இப்படி கேவலமான நிலைக்கு அந்த வியாபாரம் வந்து விட்டது வேதனை தருகிறது. கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம்” என கேள்வியெழுப்பினார்.
இதனிடையே இயக்குனர் பாரதிராஜா அறிக்கைக்கு அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ என பதிவிட்டார்.
இந்நிலையில் இயக்குநர் கேஎஸ். தங்கசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’’அனைத்து குழந்தைகளின் கைகளிலும் மொபைல் இருக்கிறது. இது போன்ற சமூக சீரழிவுகளை பரப்பாதீர்கள். அது கரோனாவை விட மோசமான பரவல்.
வயது வந்த பிள்ளைகளை வைத்து இருக்கும்பெற்றோர்களின் நெஞ்சில் நெருப்பை கொட்டாதீர்கள். இன்று பரியேறும் பெருமாள் போன்ற அற்புதமான படம் வெளிவந்து ரசிகனின் மனதில்ஒட்டுமொத்தமாக மாற்றத்தை ஏற்படுத்த கூடிய, அதே நேரத்தில் வெற்றியும் பெறும் காலத்தில் இருக்கிறோம். அதை கீழே இழுக்காதீர்கள், "இரண்டாம் குத்தின்" இயக்குனரே! ’’என்று பதிவிட்டுள்ளார்…
https://www.facebook.com/rahesh.rahesh.73/posts/2854542131448368