திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (08:30 IST)

சமூகவலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி இயக்குனர்!

இயக்குனர் கொரட்டாலா சிவா சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் கமர்சியல் மசாலா இயக்குனர்களில் ஒருவர் கொரட்டாலா சிவா. மகேஷ் பாபுவின் ஹிட் படங்களான மிர்ச்சி, பரத் அனே நானு, ஸ்ரீமந்துடு ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் சமூகவலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.