1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (15:55 IST)

நல்லா கிளப்புறாங்கைய்யா வதந்தியை... விஷால்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ வுக்கு அஞ்சலி செலுத்த தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட சிலர் வந்தனர். ஆனால், அவர்களுடன் விஷால் வரவில்லை. இது சர்ச்சையானது. நடிகர் சங்கத்தில் பிளவு என்று வதந்தியும் கிளம்பியது.

 
இது குறித்து விஷாலிடம் கேட்ட போது, கடுமையான காய்ச்சல் காரணமாகவே மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து செல்ல முடியவில்லை என்றும், இப்போது நாசர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறினார். சேர்ந்து வரலைன்னாலும் வதந்தி கிளப்புறாங்களே... என்னய்யா அநியாயம் இது.