வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (14:56 IST)

குஷ்புவை பல்டி அடிக்க வைத்த விஷால்!!

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவித்தார். 


 
 
பின்னர், நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை குஷ்பு ட்விட்டரில் அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
 
இந்நிலையில், விஷால் நீதிமன்றம் சென்றதையடுத்து அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை தயாரிப்பாளர் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. 
 
சஸ்பெண்ட் ரத்தான கையுடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதாக விஷால் அறிவித்தார். 
 
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்கும், குஷ்பு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதை குஷ்பு மறுத்துள்ளார்.
 
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.