திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (20:04 IST)

விஜய்க்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றென்றும் வெற்றிநடை தொரட்டும்; பல கோடி ரசிகைகளில் ஒருத்தி என விஜய் உருவ படத்தை வரைத்து வண்ணமிட்டு வித்தியாசமாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பைரவா படத்தில் விஜய் உடன் நடித்த கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
விஜய்யின் உருவ படத்தை வரைந்து வண்ணமிட்டு அதற்கு கீழ் என்றென்றும் வெற்றிநடை தொரட்டும்; பல கோடி ரசிகைகளில் ஒருத்தி என எழுதியுள்ளார். அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.