செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:39 IST)

முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து முன்னணி நடிகையானார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். சமீபத்தில் அவர் நடித்த தசரா மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.

இப்போது அவர் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். அதையடுத்து யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரை தர்மராஜ் ஷெட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த தொடரில் ராதிகா ஆப்தேவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.