1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (22:16 IST)

மீண்டும் சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...

என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

 
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ என சிவகார்த்திகயனோடு டூயட் பாடி நடித்த கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். இந்த படம் அவரின் சினிமா கேரியரையே மாற்றி விட்டது.
 
இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தை ஏற்க இருக்கிறார். மறைந்த பழம் பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டிஆரின் சுய சரிதையை விவரிக்கும் படத்தை எடுக்கும் முயற்சியில் அவரின் மகன் பாலகிருஷ்ணா ஈடுபட்டுள்ளார். இப்படத்திலும், ஒரு காட்சியில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வேண்டும் என இப்படத்தின் இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி ஆசைப்பட்டாராம். 
 
இயக்குனர் கிரிஷ் மகாநதி படத்தில் இயக்குனர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அப்போது, கீர்த்தியின் அபார நடிப்பை கண்டு வியந்த அவர் என்.டி.ராமாராவ் படத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டிம் என முடிவெடுத்ததாக தெரிகிறது.
 
இதுபற்றி கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.