குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தமிழ் நடிகை!
நடிகை காவ்யா தாப்பர் மும்பை ஜூகுவில் பகுதியில் கார் ஓட்டிச் சென்ற பார்க் செய்யப்பட்டு இருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
மும்பையைச் சேர்ந்த நடிகை காவ்யா தப்பார் பிக்பாஸ் ஆரவ் நடித்த மார்கெட் ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர் திரும்பி வருகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் மேல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்து சம்மந்தமாக போலிசார் அவரிடம் விசாரித்த போது முறையான ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் அவர் குடித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பெண் காவலர் ஒருவரின் சீருடையையும் பிடித்து இழுத்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.