காத்துவாக்குல ரெண்டு காதல்... ஓடிடி ரிலீஸுக்கு காத்திருப்பு!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர் படக்குழு.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான் இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிட வாய்ப்புள்ளது என தெரிகிறது. நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படமும் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள தெலுங்கு ரீமேக் படமான ஓ மணப்பெண்ணேவும் ஹாட் ஸ்டாரின் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு. அதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.