அவசரபட்டுட்டேனே, என் கணக்கு தப்பாகுமா? நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி நேற்று தனது டுவிட்டரில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க வில்லை என்றும் தமிழக அரசு டாஸ்மாக்கையும் திறக்கும் என்ற தனது கணிப்பு தவறி விட்டதாகவும், இருப்பினும் தனது கணிப்பு பொய்யானது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்த டுவிட்டை பதிவு செய்த ஒருசில மணி நேரத்தில் தமிழக அரசு வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு செய்தது.
இதனையடுத்து கஸ்தூரி தனது டுவிட்டரில், ‘அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு கேவலமான சப்பைக்கட்டுக்கள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான், நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம் என்று கூறியதோடு தமிழக அரசை மன்றாடி கேட்டு கொள்கிறேன். கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தபோது மூடிவிட்டு இப்பொழுது அதிகமாகும் பொழுது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகிவிடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பிவைக்கவேண்டாம் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கஸ்தூரியின் வேண்டுகோளை தமிழக அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்