வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (22:01 IST)

கார்த்திக் நரேனுக்கு பதில் ‘கோமாளி’ இயக்குனரா? தனுஷின் திடீர் முடிவு

தனுஷின் 43 வது படத்தை இயக்கவுள்ளவர் கார்த்திக் நரேன் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கோமாளி இயக்குனர் உள்ளே வருகிறார் என்று கோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
‘துருவங்கள் 16’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் நரகாசுரன், மாபியா போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அதற்கான கதை விவாதம் கடந்த சில மாதங்களாக நடந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் முழு கதையை தயார் செய்து தனுஷிடம் அவர் கூறிய போது அந்த கதையில் தனக்கு திருப்தி இல்லை என தனுஷ் அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக ‘கோமாளி’ இயக்குநர் பிரதீப் ரங்கராஜனிடம் தனுஷ் ஒரு கதையை கேட்டு இருப்பதாகவும் அவர் தான் ’தனுஷ் 43’படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஏற்கனவே தனுஷ் ’ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’ மற்றும் ஒரு பாலிவுட் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது