திரையுலகில் 40 ஆண்டுகள்… கார்த்திக்கிசம் போஸ்டரை வெளியிட்ட மகன்!
நடிகர் கார்த்திக் சினிமாவுக்கு அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் விதமாக கௌதம் கார்த்திக் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலமாக 1981 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இன்றோடு அவர் அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில் அவர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து நவரச நாயகனாக திகழ்ந்து வருகிறார். இப்போது கதாநாயகனாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக்கின் 40 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் விதமாக அவரின் மகன் கௌதம் கார்த்திக் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.