திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 அக்டோபர் 2022 (20:00 IST)

கார்த்தியின்'' சர்தார் ''டிரைலர் ரிலீஸில் தாமதம்...ரெட் ஜெயிண்ட்மூவிஸ் டுவீட்

sarthar
கார்த்தி நடித்த ‘சர்தார்’ பட டிரைலர்  இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியாகவில்லை இந்த   நிலையில்,இப்படத்தை வி நியோகிக்கும் உரிமையைப் பெற்ற ரெட் ஜெயிண்ட் மூவீஸ் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்தை   பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு  சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் இன்று  இரவு 7 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், குறித்த நேரத்தில் டிரைலர் ரிலீஸாகவில்லை. எனவே ரெய் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவன தன் டுவிட்டர் பக்கத்தில், இன்னும் சில மணி நேரத்தில் இப்பட டிரைலர் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

Edited by Sinoj