பொங்கலோ பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி!

karthi
பொங்கலோ பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி!
siva| Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (11:55 IST)
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் ஏற்கனவே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கலோ பொங்கல் என்று கூறி தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து கூறி இருப்பதாவது: இனிமை தங்க, செல்வம் பொங்க, வளமை தங்க, அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம் பெருகட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.
நடிகர் கார்த்தியின் இந்த பொங்கல் வாழ்த்து டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :