நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கும் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’… டீசர் ரிலீஸ்!
பாலிவுட்டின் ஸ்டார் இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். இவர் இயக்கிய முதல் படமாக குச் குச் ஹோத்த ஹை 1998 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து அவர் இயக்கத்தில் கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான் என அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் எல்லாம் ஹிட்டாக அமைந்தன.
இதற்கிடையில் தர்மா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து வந்தார். கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏ தில் ஹே முஷ்கில் என்ற படத்தை இயக்கிய பின்னர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ரண்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில் ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற படத்தை இயக்கியுள்ளார். அவரின் மற்ற படங்களை போல இந்த படமும் காதல் படமாகவே அமைந்துள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.