1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (15:00 IST)

என் கழுத்தில் முகம் புதைத்து...இறுக கட்டிக் கொண்டு : கங்கனா ரனாவத் பாலியல் புகார்

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தாவை தொடர்ந்து, இயக்குநர் ஒருவர் மீது நடிகை கங்கனா ரணாவத் பாலியல்  குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.

 
கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த குயின் படத்தில் நடித்தபொழுது அதன் இயக்குநரான விகாஸ் பாஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கங்கனா தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தின் விளம்பர சுற்றுலாவுக்காக சென்றபொழுது தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக  இயக்குநர் விகாஸ் மீது பெண் ஒருவரும் புகார் எழுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கங்கானா மீண்டும் பேட்டி அளித்தார்.
 
கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுவார். ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் கேவலப்படுத்தினார்.
 
இந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு முறை விகாசை நான் சந்திக்கும்பொழுது, வழக்கம் போலான வரவேற்பில் இருவரும் கட்டி கொள்வோம். அவர் எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். என்னை இறுக கட்டி கொள்வார். பின்னர் எனது முடியை முகர்ந்திடுவார்.
 
அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது. அதன்பின் விகாஸ் என்னிடம், நீ எப்படி வாசமுடன் இருக்கிறாய் என்பதனை நான் நேசிக்கிறேன் என்பார். அவரிடம் ஏதோ தப்பு இருக்கு ... என்பதை என்னால் கூற முடியும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.