புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2022 (21:02 IST)

''கண்டேன் உன்னை தந்தேன் என்னை'' பட முக்கிய அப்டேட்!

kanden unnai thanthen ennai
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தங்கவேலு கண்ணன். இவர்  தயாரித்து நடித்த ”மாய மோகினி ”என்ற படம் கடந்த 2017 ஆம்  ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இப்படத்தில்,  நடிகையும் பாஜக பொறுப்பாளருமான குஷ்புவின் சகோதரர் அப்துல்லா ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, இமான் அண்ணாச்சி, ‘பாய்ஸ்’ ராஜன்,’பூவிழி’ மோகன், ’மகா நதி’ சங்கர், எஸ்.என் பார்வதி உள்ளிட்ட   பலரும் நடித்திருந்தனர்.
 
இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் தயாரிப்பில் வெளியான ’கள்ளத்தனம்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில்,  நடித்த அனைவரையும் புதுமுகங்களாக அறிமுகம் செய்தார்.
 
இந்நிலையில், தற்போது, இவர் இயக்கி, வசனம் எழுதி, தயாரித்து  நடித்துள்ள  படம் ‘’கண்டேன்  உன்னை தந்தேன் என்னை’’.
 
இப்படத்தில் ஹீரோவாக அரவிந்த் – அம்சரேகா  நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து, பிரபல குணச்சித்திர நடிகை மேகா ஸ்ரீ , குணச்சித்திர நடிகர் கோவை சேகர்,வில்லனாக ஜாகிர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
K.U.T.E (கண்டேன் உன்னை தந்தேன் என்னை) படத்திற்கு ஏ.சி. தினகரன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு லட்சுமணன் எடிட்டிங் செய்துள்ளார்.கவிஞர் முகிலன், சினோஜ், காதல் மதி உள்ளிட்டோர் பாடல்வரிகள் எழுதியுள்ளனர்.
thankavelu kannan
இப்படத்திற்கு ’சென்’ செந்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு, சிவா- மனோஜ் நடனம் அமைத்துள்ளனர். இப்படத்திற்கு ’நாக் அவுட்’ நந்தா சண்டை பயிற்சி அமைத்துள்ளார்.
 
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும்  இயக்குனர் தங்கவேலு கண்ணன் தெரிவித்துள்ளார்.