வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (18:32 IST)

'காஞ்சனா 3' தணிக்கை மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'காஞ்சனா 3. இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது
 
இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 19ஆம் ரிலீஸ் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தை விளம்பரம் செய்யும் பணியும் ஆரம்பமாகிவிட்டது
 
இந்த நிலையில் இன்று 'காஞ்சனா 3' திரைப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் எந்தவித 'கட்'டும் இல்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா முதல்முறையாக கமிட் ஆன இந்த படத்தில் வேதிகா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். முதல் மூன்று பாகங்கள் போல் இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது