திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (07:52 IST)

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கனா காணும் காலங்கள் சீசன் 2… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பள்ளியில் நடக்கும் சுவையான விஷயங்களைக் அழகான மாலையாகக் கோர்த்தால் அதுதான் கனா காணும் காலங்கள் தொடர். இந்த தொடரில் தங்களது லட்சியங்களை அடையும் பாதையை தேட 12ம் வகுப்பு படித்து முடித்து மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். எனவே அடுத்து புது மாணவர்கள் பள்ளியிர் சேர்கின்றனர்.

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் 2008 ஆம் ஆண்டில் இருந்து சில ஆண்டுகள் ஒளிபரப்பானது. இப்போது பிரபலமாக இருக்கும் இயக்குனர்களான நலன் குமாரசாமி மற்றும் ரவிகுமார் ஆகியோர் இந்த தொடரின் சில எபிசோட்களை இயக்கி இருந்தனர்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸாக கடந்த ஆண்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில் இப்போது சீசன் 2 ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.