ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த் – கமல்ஹாசன் இரங்கல்!
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் இறப்பிற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழைய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தவர் ஸ்ரீகாந்த். பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் இறப்பிற்கு தற்போது இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன் “கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.