1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:10 IST)

அமரன் படம் பார்த்த பின்னர் ரிஸ்க் எடுக்க தயாரான கமல்ஹாசன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இந்த படத்தில் முதலில் முதலீடு செய்த சோனி நிறுவனம், அதிக பட்ஜெட் காரணமாக இப்போது விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அமரன் திரைப்படத்தை தயாரிப்பாளரான கமல்ஹாசன் பார்த்ததாக சொல்லப்படுகிறது. படம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதால் தங்கள் நிறுவனம் மூலமாகவே நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு அவருக்கு படத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.