ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2023 (17:44 IST)

''காலம் என்னை தேடி வந்தது...'' கமல்234 பட டைட்டில் வீடியோ ரிலீஸ்

thug life
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் கமல்234 பட டைட்டில் 'தக் லைஃப்' அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 படத்தில்  துல்கர் சல்மான்,  ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர்  இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

 
இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கமலின் 234 பட டைட்டில் அறிவிப்பு வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டைட்டில்  'தக் லைஃப்' என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மமான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். இதில் டைட்டில் இன்ட்ரோ வீடியோவில் பேசும் கமல்,   ''என் பேரு ரங்கராய சக்திவேல நாயக்கன். காயல்பட்டினகாரன். பிறக்கும்போதே என் தலையில் எழுதி  கிரிமினல், யாகுஷான்னு எழுதி வைச்சுட்டாங்க. யாகுசான்னா ஜப்பான் மொழியில கேங்ஸ்டர்ன்னு சொன்னாங்க'' என்று பேசிவிட்டு சண்டைபோடும் காட்சிகள் டிரெண்டாகி வருகிறது.

கமலின் பேச்சு, உடை, சண்டை மற்றும் சினிமாடோகிராபி, இயக்கம், இசை , மணிரத்தம் இயக்கம் என எல்லாமே சூப்பராக அமைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.