புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:45 IST)

ரயிலில் வரையப்பட்ட விக்ரம் போஸ்டர்…. செம்ம மாஸான விளம்பரத்தை தொடங்கிய படக்குழு!

விக்ரம் திரைப்படம் ஜுன் 3 ஆம்  தேதி பேன் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போது அடுத்த கட்ட ப்ரமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் ஒன்றில் விக்ரம் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வரைந்து விளம்பரப் படுத்தியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.