கமல் பா ரஞ்சித் படம் இப்போதைக்கு இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!
அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் குண்டு, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.
இப்போது அவர் விக்ரம்மை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் சார்பட்டா பரம்பரை 2 பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களை விட அவர் கமல்ஹாசனோடு இணைய உள்ளதாக வெளியான தகவல்கள்தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதுபற்றி இப்போது பேசியுள்ள ரஞ்சித் இப்போதுதான் அந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறாராம். ஆனால் இந்த படம் உடனடியாக நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையாம். ஏனென்றால் அடுத்து கமல், ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்தபின்னர்தான் அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தெரியவரும் என சொல்லப்படுகிறது.